SELANGOR

குடியிருப்பாளர்களின் வசதிக்காக மேற்கூரைகள் கொண்ட நடைபாதைகள் கட்டப்படும் 

4 மார்ச் 2024, 3:45 AM
குடியிருப்பாளர்களின் வசதிக்காக மேற்கூரைகள் கொண்ட நடைபாதைகள் கட்டப்படும் 

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4: ஶ்ரீ செத்தியா தொகுதியில் குடியிருப்பாளர்களின் வசதிக்காக  மேற்கூரைகள் கொண்ட நடைபாதைகள்   கட்டப்படும்.

க்ளென்மேரி எல்ஆர்டி நிலையம் மற்றும் பாரடிக்ம் ஷாப்பிங் சென்டரைச் சுற்றி அதிக நடைபாதைகளை உருவாக்குவது இதில் அடங்கும் என்று சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஃபஹ்மி நகா கூறினார்.

"இந்த திட்டம் பற்றி பெட்டாலிங் ஜெயா மேயருடன் நான் விவாதிப்பேன், ஏனெனில், இத்திட்டம் குடியிருப்பாளர்களுக்கு வசதியாக இருக்கும்.

"மேலும், பாதுகாப்புக் காரணிகளை கருத்தில் கொண்டு நடைபாதைகளில் தெரு விளக்குகளும் பொருத்தப்படும்," என்று அவர் நேற்று  கிளானா மாலில் உள்ள ஶ்ரீ செத்தியா தொகுதி அளவில் சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின் போது கூறினார். அந்நிகழ்வில், டாக்டர் ஃபஹ்மி கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அங் பாவ் வழங்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.