ஷா ஆலம், பிப் 29: எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பண்டார் பாரு செலாயாங்கில் உள்ள டத்தாரான் இல்முவில் நடைபெறும் ``செலாயாங்கூ சாயாங் 2024`` கார்னிவலில் கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை சிலாங்கூர் எம்பிஐ இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன என்று செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) தெரிவித்தது.
இந்நிகழ்வில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனை மூலம் அடிப்படைத் பொருட்கள் மற்றும் பள்ளிப் பொருட்கள் ஆகியவை மலிவு விலையில் விற்பனை செய்யப்படும். மேலும், காய்கறிகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை இலவசமாக வழங்கப்படும்.
அதுமட்டுமில்லாமல், ரொக்கப் பரிசுகளை வழங்கும் நாட்டுப்புற மற்றும் குழந்தைகளுக்கான போட்டி விளையாட்டுகளும் இடம்பெறும்.




