SELANGOR

ஷா ஆலம் மாநகராட்சி எம்பிஐ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

27 பிப்ரவரி 2024, 7:43 AM
ஷா ஆலம் மாநகராட்சி எம்பிஐ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

ஷா ஆலம், பிப் 27: நேற்று எம்பிஎஸ்ஏ மாநாட்டு மையத்தில், ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) எம்பிஐ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையெழுத்திட்டது.

எம்பிஐயின் துணை நிறுவனமான பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் (பிளாட்ஸ்) மற்றும் யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு கூட்டு பிரச்சாரத்தை செயல்படுத்துவதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது என்று எம்பிஎஸ்ஏ கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் கூறினார்.

"இந்த ஒத்துழைப்பு @ஷா ஆலமின் தொழில் முனைவோர் மேம் பாட்டுத் திட்டத்தின் குறிக்கோளுடன் ஒத்துப்போகிறது. இது மாநிலத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை ஆதரிக்க ஒரு முழுமையான மற்றும் சாதகமான சூழலை உருவாக்குகிறது.

"தொழில் முனைவோர் பயிற்சி, புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குதல், நிதி வழங்குதல், தயாரிப்பு சந்தைப்படுத்தல் மற்றும் மூலோபாய வணிக வளாகங்களை வழங்குதல் ஆகியவை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் அடங்கும்" என்று முகமட் அசார் முகமட் ஷெரீப் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவை ஷா ஆலம் மேயர் செரெமி தர்மன் மற்றும் எம்பிஐ தலைமை செயல் அதிகாரி சைபோல்யாசன் மாட் யூசோப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

ஆலம் இம்பியான், செக்‌ஷன் 35, பிளாட்ஸ் திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கல் கருத்தை கொண்ட இடமாகப் பயன்படுத்தப்படும் என்று முகமட் அசார் கூறினார்.

உண்மையில், இதே இடம் ஹிஜ்ரா சிலாங்கூரால் எதிர்வரும் ரம்ஜான் மாதத்திலும் நிர்வகிக்கப்படும். மேலும், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு திட்டத்திற்கான மையமாகவும் பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

"கூடுதலாக, 2025 ஆம் ஆண்டளவில் 10,000 மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை அடையும் இலக்கின் அடிப்படையில் பெட்ரோனாஸ் மூலம் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை நிறுவுதல் போன்ற பல ஒத்துழைப்பு முயற்சிகளிலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.