பெட்டாலிங் ஜெயா, பிப் 27: இந்த ஆண்டும் சிலாங்கூர் ஆகாய ஊர்திகளின் கண்காட்சி (SAS) 2024, RM1.3 பில்லியன் பரிவர்த்தனை மதிப்பை இலக்காகக் கொண்டு தொடர்கிறது.
செப்டம்பர் 12 முதல் 14 வரை சுபாங்கில் நடைபெறவுள்ள ``Skypark RAC` நிகழ்ச்சிக்கு 25,000 வருகையாளர்கள் இலக்காகக் கொண்டுள்ளனர் என்று முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சி ஹான் கூறினார்.
"SAS 2024 யில் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் தேடல் மற்றும் மீட்பு பிரிவுகள் போன்ற புதிய பிரிவுகளை வழங்குவது உட்பட பல்வேறு சுவாரஸ்யமான திட்டங்கள் மற்றும் செயல் பாடுகளும் இடம்பெறும்.
"மேலும், இன்வெஸ்ட் சிலாங்கூர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த விமானக் கண்காட்சியில் சிங்கப்பூர், கொரியா, சீனா மற்றும் டென்மார்க் உட்பட 45 நாடுகளும் பங்கேற்கும்" என்று அவர் இன்று ஷெரட்டன் ஹோட்டலில் ``SAS`` 2024 செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
இதில் இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பெர்ஹாட் டத்தோ ஹசன் அஸ்ஹாரி மற்றும் சிலாங்கூர் டாருல் எஹ்சான் விண்வெளித் தொழில் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் மூத்த இயக்குநர் ஜேமி ஹனிஃப் ராம்லீ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தில் பங்கு பெற ஆர்வமுள்ள தொழில்துறையினர் மே 31க்கு முன் SAS செயலகத்திற்கு enquiry@selangoraviationshow.
முன்னதாக விமான கண்காட்சிகளில் பங்கேற்ற கண்காட்சியாளர்களும் 10 சதவீத தள்ளுபடியை அனுபவிக்கலாம்.




