SELANGOR

ரஹ்மா சுகாதாரக் கார்னிவலில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்பு

26 பிப்ரவரி 2024, 10:03 AM
ரஹ்மா சுகாதாரக் கார்னிவலில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்பு

ஷா ஆலம், பிப் 26: அல்-உபுடியா மசூதி, செக்‌ஷன் 19இல் பத்து தீகா தொகுதி ஏற்பாடு செய்த ரஹ்மா சுகாதாரக் கார்னிவலில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் உள்ளடக்கங்களில் இலவச இரத்த அழுத்தம், பல் மற்றும் கண் பரிசோதனைகள் உட்பட இல் திசம் சிலாங்கூர் பென்யாயாங் பதிவு கவுண்டர் திறப்பு ஆகியவை அடங்கும் என சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட் ஹரோன் கூறினார்.

சுகாதாரப் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

“இது முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், வரவேற்பு ஊக்கமளிக்கிறது. மேலும் பலர் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்காக வருடத்திற்கு மூன்று முறை இந்த நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

"சுமையைக் குறைக்க முதல் 10 நபர்களுக்கு நாங்கள் மூக்கு கண்ணாடிகளை இலவசமாக வழங்கினோம், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குழுவை சேர்ந்தவர்களுக்கு ஆகும்" என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.