SELANGOR

மாநில அரசு வழங்கும் 40 க்கும் மேற்பட்ட திட்டங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன

26 பிப்ரவரி 2024, 10:01 AM
மாநில அரசு வழங்கும் 40 க்கும் மேற்பட்ட திட்டங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன

கோலா சிலாங்கூர், பிப் 26: சமூக ஊடகங்கள் மூலம் மாநில அரசு வழங்கும் 40க்கும் மேற்பட்ட திட்டங்கள்  பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங்கின் (ISP) திட்டங்கள் தொடர்பான மக்களின் புரிதலை அதிகரிப்பதில் ஊடகம் முக்கியப் பங்காற்றியது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"இது மாநில அரசுக்கும் மக்களுக்கும் இடையே பயனுள்ள தொடர்பை மறைமுகமாக வளர்க்கும்" என்று இன்று கோலா சிலாங்கூர் விளையாட்டு வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் மக்கள் மடாணி திட்டத்தைத் தொடக்கி வைத்த பிறகு நடந்த உரையாடல் அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 75 சதவீதத்தைக் கொண்ட நகர்ப்புறத்தில் தகவலை தெரிவிப்பதில் உள்ள சவாலையும் அமிருடின் ஒப்புக்கொண்டார்.

"நகர்ப்புறங்களில், உள்ளூர் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மிகவும் தொலைவில் உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஏனெனில் அவர்கள் பரபரப்பான சூழ்நிலையில் வாழ்கின்றனர்," என்று அவர் மேலும் கூறினார்.

உரையாடல் அமர்வில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு, அமிருடின் மற்றும் பேராக் முதலமைச்சர் டத்தோஸ்ரீ சாரணி முகமட் ஆகியோரிடம் கேள்விகள் கேட்க பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.