SELANGOR

உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு இலவசப் பேருந்து கட்டணத் திட்டம் - புக்கிட் மெலாவத்தி

26 பிப்ரவரி 2024, 8:42 AM
உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு இலவசப் பேருந்து கட்டணத் திட்டம் - புக்கிட் மெலாவத்தி

கோலாலம்பூர், பிப் 26: உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கான இலவச பேருந்து கட்டணத் திட்டத்தை புக்கிட் மெலாவத்தி மாநிலச் சட்டமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இத்திட்டம் 100 மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது என அதன் ஒருங்கிணைப்பாளர் எஸ் தீபன் கூறினார்.

"இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆர்வமுள்ளவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் புக்கிட் மெலாவத்தி மாநில சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், புக்கிட் மெலாவதியில் உள்ள பெற்றோரை எம்பிஐயின் பள்ளி உதவித் திட்டத்திற்கு அடுத்த மார்ச் 11க்குள் விண்ணப்பிக்குமாறு எஸ் தீபன் கேட்டுகொண்டார்.

எம்பிஐ 16,800 மாணவர்களுக்குப் பள்ளிகுத் திரும்பும் உதவிக்காக கிட்டத்தட்ட RM1.7 மில்லியன் செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.