SELANGOR

``செலாயாங்கூ சாயாங் 2024`` கார்னிவலில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

26 பிப்ரவரி 2024, 2:45 AM
``செலாயாங்கூ சாயாங் 2024`` கார்னிவலில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், பிப் 26: எதிர்வரும் மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் பண்டார் பாரு செலாயாங்கில் உள்ள டாதாரன் இல்முவில் நடைபெறும் ``செலாயாங்கூ  சயாங் 2024`` கார்னிவலுக்குப் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை சிலாங்கூர் எம்பிஐ இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன என்று செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) தெரிவித்தது.

இந்நிகழ்வில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா விற்பனை மூலம் அடிப்படைத் பொருட்கள் மற்றும் பள்ளிப் பொருட்கள் ஆகியவை மலிவு விலையில் விற்பனை செய்யப்படும். மேலும், காய்கறிகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை இலவசமாக வழங்கப்படும்.

அதுமட்டுமில்லாமல், ரொக்கப் பரிசுகளை வழங்கும் நாட்டுப்புற மற்றும் குழந்தைகளுக்கான போட்டி விளையாட்டுகளும் இடம்பெறும்.

"அனைவரும் வாருங்கள், அங்கே சந்திப்போம்" என்று முகநூலில் பதிவு செய்யப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.