SELANGOR

இ-ஸ்போர்ட்ஸ் தேர்வுகளில் கலந்து கொள்ள அரசு ஊழியர்களுக்கு அழைப்பு

22 பிப்ரவரி 2024, 6:57 AM
இ-ஸ்போர்ட்ஸ் தேர்வுகளில் கலந்து கொள்ள அரசு ஊழியர்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், பிப் 22: சிலாங்கூர் அரசு நலன் மற்றும் விளையாட்டு கவுன்சிலின் (மக்சக்) இ-ஸ்போர்ட்ஸ் பங்கேற்பாளர் தேர்வுகளில் கலந்து கொள்ள மாநில அரசு ஊழியர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

சிலாங்கூர் மக்சக் இ-ஸ்போர்ட்ஸ் தலைவராக இருக்கும் கோலா லங்காட் நகராண்மை கழகம் தேர்வு அமர்வு மார்ச் 9 ஆம் தேதி காலை 8 மணிக்குக் கோலா லங்காட் நகரசபை விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் என்று அறிவித்தது.

"போட்டி பிரிவுகள், Fifa24 (தனி/குழு) மற்றும் PUBG மொபைல் (குழு) ஆகியவை ஆகும். சிலாங்கூரில் பணியாற்றும் மற்றும் ஆர்வமுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் குறிப்பிட்ட நாளில் தேர்வு அமர்வில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்," என்று எம்பிகேஎல் தெரிவித்துள்ளது.

ஆர்வமுள்ள நபர்கள் மார்ச் 7 ஆம் தேதிக்கு முன் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் 011-18820676 (வர்ஹான்) அல்லது 010-7639322 (அஸ்வாடி) தொடர்பு கொள்ளுங்கள்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.