ஷா ஆலம், பிப் 22: மடாணி ரக்யாட் 2024 மத்திய மண்டல திட்டத்தில் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகமும் மக்களை சந்திக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது, அதில் 200 அதிர்ஷ்ட குழுக்கு பரிசுகள் மற்றும் வரி விலக்குகளைக் கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிகேஎஸ்) வழங்குகிறது.
இந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் நிகழ்வில் அறிவிப்புக் கட்டணங்கள் (fi notis) மற்றும் மதிப்பீட்டு வரி வாரண்டுகளுக்கு 50 சதவீதத் தள்ளுபடி வழங்கப்படும் என்று எம்பிகேஎஸ் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 23 முதல் 25 வரை கோலா சிலாங்கூர் விளையாட்டு வளாகத்தில் மடாணி ரக்யாட் 2024 மத்திய மண்டலத் திட்டத்தை முன்னிட்டு நடைபெறும் எம்பிகேஎஸ் சந்திப்பு தினத்தில் கலந்து கொள்ளவும்.
"200 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான பரிசுகள் காத்திருக்கின்றன. மேலும், அறிவிப்பு கட்டணம் மற்றும் மதிப்பீட்டு வரி வாரண்ட் களுக்கு 50 சதவீதத் தள்ளுபடி வழங்கப்படுகிறது" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர், புக்கிட் ஜலீல் அரங்கத்தில் நடைபெற்ற மடாணி அரசின் ஓராண்டு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகப் பிரதமர் அலுவலகம் மடாணி ரக்யாட் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
சிலாங்கூர், பேராக், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவை உள்ளடக்கியதோடு, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நிறைவு விழா பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறும். இதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்வார் என என்று எதிர்பார்க்கப்படுகிறது.




