SELANGOR

எம்பிஐயின் பள்ளிக்குத் திரும்பும் திட்டத்திற்கான விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது – பந்திங் தொகுதி

20 பிப்ரவரி 2024, 9:13 AM
எம்பிஐயின் பள்ளிக்குத் திரும்பும் திட்டத்திற்கான விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது – பந்திங் தொகுதி

ஷா ஆலம், பிப் 20: எம்பிஐயின் பள்ளிக்குத் திரும்பும் திட்டத்தைப் பந்திங் தொகுதியின் சமூக சேவை மையம் ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது, பந்திங் தொகுதி வாக்காளர்களுக்கு விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் பிப்ரவரி 19, 2024 முதல் மார்ச் 13, 2024 வரை இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் பங்கு பெற தேவைப்படும் தகுதிகள் விண்ணப்பதாரரின் தாய் அல்லது தந்தை பந்திங் தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும். மேலும், குழந்தைகள் தேசியப் பள்ளி, தேசிய வகை பள்ளி, தேசிய இடைநிலைப்பள்ளி, தேசிய ஆரம்பப் பள்ளி, தேசிய சமயப் பள்ளி மற்றும் தேசிய சமய இடைநிலைப்பள்ளி ஆகியவற்றில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், குடும்ப வருமானம் RM5000க்குக் குறைவாக இருக்க வேண்டும். 2 குழந்தைகள் படிக்கும் குடும்பத்தில் ஒரு பிள்ளைக்கு மட்டுமே உதவி வழங்கப்படும். அதே சமயத்தில் நான்கு குழந்தைகளுக்கு மேல் படித்தால் 2 குழந்தைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் ஒரு மாணவருக்கு RM100 வழங்கப்படும். ஆகவே, எம்பிஐ படிவத்தை பூர்த்தி செய்ய பந்திங் சமூகச் சேவை மையத்திற்கு வருகை புரியுங்கள்.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு RM100 வழங்கப்படும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் 03- 31811083 என்ற எண்ணின் மூலம் அலுவலகத்திற்கு அழைக்கவும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.