SELANGOR

செந்தோசாவில்  தாவாஸ் பள்ளி நுழைவு உதவித் திட்டம்

20 பிப்ரவரி 2024, 9:11 AM
செந்தோசாவில்  தாவாஸ் பள்ளி நுழைவு உதவித் திட்டம்

ஷா ஆலம், பிப் 20: செந்தோசாவில்  தாவாஸின் சீ மஞ்சா  பள்ளி நுழைவு திட்டத்தின் உதவிகள் ஒப்படைப்பு  நாளை பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறும். டாக்டர் குணராஜ் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு செந்தோசா தொகுதி வாக்காளர்களுக்கு மட்டும், குறிப்பாக 2017 ம் ஆண்டில் பிறந்த  குழந்தைகளுக்கு  இம்மாதம்  பிப்ரவரி 19 முதல் இந்த உதவிக்கான குறுஞ்செய்தி அழைப்பை  பெற்றுள்ளனர்  என  தாவாஸ் கூறியது. செந்தோசா சட்டமன்ற சமூக சேவை மையத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் நிகழ்வில்  உதவிகள் வழங்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாணவர்களுக்குப் பள்ளி பை, தண்ணீர் போத்தல், உணவு பாத்திரம் போன்ற பள்ளி உபகரணங்கள் வழங்கப்படும். இந்த உதவி பெற்றோர்களின் சுமையைக் குறைக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், குடியிருப்பாளர்கள் தத்தம் தொகுதியில் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

தாவாஸ் உறுப்பினர்கள் பள்ளி நுழைவு உதவி திட்டத்தைப் பெற தாவாஸ் செயலியை உடனே பதிவிறக்கம் செய்யவும். மேலும், பிற தொகுதிகளில் இந்த உதவியைப் பெறும் உறுப்பினர்களுக்கு அவ்வவ்போது தகவல்கள் தெரிவிக்கப்படும் என தாவாஸ் கூறியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.