SELANGOR

பெண்களுக்குப் பூ தொடுக்கும் பயிற்சி பட்டறை ஏற்பாடு

20 பிப்ரவரி 2024, 7:52 AM
பெண்களுக்குப் பூ தொடுக்கும் பயிற்சி பட்டறை ஏற்பாடு

ஷா ஆலம், பிப் 20: பெண்களுக்குப் பூ தொடுக்கும் பயிற்சி பட்டறை ஒன்றை

செந்தோசா தொகுதியின் வனிதா பெர்டாயா சிலாங்கூர் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வுக்கு  செந்தோசா சட்டமன்ற  உறுப்பினர் டாக்டர் குணராஜ் அவர்கள் சிறப்பு வருகை புரிவார் என

தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வு செந்தோசா தொகுதி சேவை மையத்திற்கு அருகே அமைந்துள்ள செந்தோசா

சிடிசி (CDC) எனும் இடத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2

மணி நடைபெறும்.

இப்பட்டறையில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். மேலும், இதில்

கலந்து கொள்ளும் பெண்களுக்கு பூக்களும் மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும்.

அதுமட்டுமில்லாமல், இப்பட்டறை முடிவடைந்த பிறகு கலந்து கொள்ளும் பெண்களின்

வணிக தொடர்பான நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்பார்வையிடும் என

செந்தோசா தொகுதியின் வனிதா பெர்டாயா சிலாங்கூரின் தலைவர் குமாரி ஏஞ்சலின்

கூறினார்.

இத்திட்டத்தின் நோக்கம் பெண்களுக்குக் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்பை

வழங்குவதே ஆகும்.இதில் பங்கேற்க விருப்பம் உள்ள பெண்கள் நேரடியாக

குமாரி ஏஞ்சலினுடன்    016-9162553    எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.