SELANGOR

2,000 கண்காணிப்பு கேமராக்களை நிறுவ மாநில அரசு இலக்கு

20 பிப்ரவரி 2024, 4:14 AM
2,000 கண்காணிப்பு கேமராக்களை நிறுவ மாநில அரசு இலக்கு

கோலாலம்பூர், பிப் 20: சிலாங்கூரில் 2026க்குள் நிர்வாகப் பகுதியைச் சுற்றி 2,000 கண்காணிப்பு கேமராக்களை (CCTV) நிறுவ மாநில அரசு இலக்கு வைத்துள்ளது.

டிஜிட்டல் இமேஜ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிப்பு அமைப்பை வழங்கும் சிசிடிவி அனலிட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கு RM25 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவியல் கல்வி ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

"5ஜி நெட்வொர்க் கவரேஜ் மூலம் சிசிடிவி அதிக வேகத்தில் பாதுகாப்பு, மாசுபாடு மற்றும் பொது சுகாதாரம் ஆகிய அம்சங்களை கண்காணிக்க முடியும்.

"இத்திட்டம் மூலம் முழு நேரமும் கண்காணிப்பு தானாகவே செய்யப்படலாம்" என்று டாக்டர் ஃபஹ்மி நகா கூறினார்.

மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு (UPEN) மூலம் 414 சிசிடிவிகள் மாநிலம் முழுவதும் நிறுவப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

"சிசிடிவி கருவிகளை நிறுவுவது அரசு சேவைகள் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டிற்குள் முழு 5ஜி கவரேஜ் அடைய விரும்பும் மாநிலத்தின் எண்ணத்தையும் நிறைவேற்றுகிறது" என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.