ஷா ஆலம், பிப் 9: சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிப்ரவரி 10 முதல் மூன்று நாட்களுக்கு எஹ்சான் ரஹ்மா விற்பனை நடைபெறாது.
சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்தால் (பிகேபிஎஸ்) நடத்தப்படும் மலிவு விற்பனை பிப்ரவரி 13 அன்று மீண்டும் செயல்படத் தொடங்கும்.
"நாங்கள் பிப்ரவரி 10 முதல் 12 வரை சிறிது ஓய்வெடுத்து விட்டு, பிப்ரவரி 13 செவ்வாய்கிழமை அன்று அனைவரையும் மீண்டும் சந்திப்போம். சீன புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று பிகேபிஎஸ் முகநூலில் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச் சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5
கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.




