SELANGOR

மகளிர்  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தொழில் மயம்

7 பிப்ரவரி 2024, 4:03 AM
மகளிர்  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தொழில் மயம்

சுபாங் ஜெயா, பிப் 7: இளம் பெண்களை டிஜிட்டல் தொழில் முனைவோராக ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மாநில அரசு உறுதி பூண்டுள்ளது.

எனவே, இளம் பெண்களின் தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் ஊடக ஊக்குவிப்புத் திட்டத்தை (உசாஹவனிதா) மேற்கொள்ள RM231,000 ஒதுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

"மின்-தொழில் முனைவோர் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து இளம் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

"பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை மேம்படுத்துவதும், பெற்ற வெற்றியின் மூலம் சமூகத்திற்கு ஏதாவது வழங்குவதும் முக்கியம்" என்று அன்பால் சாரி கூறினார்.

இன்று ஹோட்டல் ஜெனோவில் உசாஹவனிதா நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மொத்தம் 200 பங்கேற்பாளர்கள் நான்கு கட்டங்களை உள்ளடக்கிய திட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். அதாவது அடிப்படை பயிற்சி, மேம்பாடு, நடைமுறை மற்றும் இறுதியான 30 பங்கேற்பாளர்களுக்கு போட்டி என நான்கு கட்டங்கள் உள்ளன.

வணிக உலகம் பெண்களுக்குப் புதிய துறை அல்ல என அன்பால் மேலும் கூறினார்.

“உலகமயமாக்கல் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். பெண்கள் சமையலறையில் மட்டுமே சிக்கிக் கொள்கிறார்கள் என்ற வார்த்தைகள் இனி பொருந்தாது.

தொட்டிலை ஆட்டும் கை உலகையே அசைக்க வல்லது என்ற மலாய் பழமொழி உண்மைதான் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.