SELANGOR

மீடியா சிலாங்கூர் அலுவலகத்திற்குப் பெண்கள் மற்றும் சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் வருகை 

6 பிப்ரவரி 2024, 9:50 AM
மீடியா சிலாங்கூர் அலுவலகத்திற்குப் பெண்கள் மற்றும் சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் வருகை 

ஷா ஆலம், பிப் 6: இன்று மெனாரா பேங்  ரக்யாட்டில் உள்ள மீடியா சிலாங்கூர் அலுவலகத்திற்குப் பெண்கள் மற்றும் சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர்  முதன் முறையாக வருகை புரிந்தார்.

பொருளாதாரப் பாதுகாப்பு திட்டங்களை ஊக்குவிப்பதில் மாநில அரசின் அதிகாரபூர்வ ஊடகத்துடன்  நல்ல உறவை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக மீடியா சிலாங்கூர் அலுவலகத்திற்கு வருகை புரிந்ததாக அன்பால் சாரி கூறினார்.

"நம்மிடம் நல்ல கொள்கைகள் மற்றும் நேர்த்தியான தகவல்  பரிமாற்றமிருந்தால்,  தகவல்களை மறைமுகமாக அனுப்புவது பயனுள்ளதாக இருக்காது. அது எங்கும் செல்லாது. பரஸ்பர கருத்துப் பரிமாற்றம், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் மீடியா சிலாங்கூர் இடையே மூலோபாய ஒத்துழைப்பு தேவை.

"முன்னதாக விளக்கக்காட்சியின் மூலம் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம், ஒரு நல்ல உடன்பாடு ஏற்பட்டது. 2024இல், நாங்கள் மக்களுக்குத் தகவல்களைச் சிறப்பான முறையில் கொண்டு சேர்ப்போம்," என்று அவர் கூறினார்.

அவரது வருகையை மீடியா சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் ஃபரீத் அஷாரி, மூத்த  ஆசிரியர் ஃபாத்தி அரிஸ் உமர் மற்றும் செயல்பாட்டு மற்றும் மூலோபாய பிரிவில் தலைவர் முகமட் சுல்கிஃப்லி இஸ்மாயில் ஆகியோர் வரவேற்றனர்.

அன்பால் தனது அலுவலக ஊழியர்கள் சிலருடன் காலை 10 மணியளவில் மீடியா சிலாங்கூர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மீடியா சிலாங்கூர் நடவடிக்கைகள் மற்றும் பணியிடங்களை ஆய்வு செய்தார்.

அவர் மீடியா சிலாங்கூர் ஊழியர்களுடன் உரையாடிந்துடன், சிலாங்கூர் டிவியில் செய்திகளைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பிரதான ஸ்டுடியோ மற்றும் ஸ்டுடியோ 2 ஐயும்  பார்வையிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.