SELANGOR

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்கு எம்பிஏஜே செல்காம் டிஜியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

6 பிப்ரவரி 2024, 9:35 AM
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்கு எம்பிஏஜே செல்காம் டிஜியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

அம்பாங் ஜெயா, பிப் 6: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்கு அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) செல்காம் டிஜி பெர்ஹாட் (செல்காம் டிஜி) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

10 ஆண்டுகால ஒத்துழைப்பின் மூலம் உலு கில்லாங்கில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் 5ஜி தொழில் நுட்பச் சேவைகளை இரு தரப்பினரும் வழங்க முடியும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

"இந்த ஒத்துழைப்பு ஒரு ஸ்மார்ட் சிட்டி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும். இது குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் இந்த பகுதியில் வணிக வளர்ச்சியை மேம்படுத்தும்.

"ஸ்மார்ட் சிட்டி 2025 ஏற்ப சிலாங்கூரில் உள்ள மற்ற நகரங்களிலும் இதுபோன்ற ஒத்துழைப்பு தொடரும் என்று நான் நம்புகிறேன்," என அவர் இன்று எம்பிஏஜே மாநாட்டு மையத்தில் ஆற்றிய உரையில் கூறினார்.

செல்காம் டிஜி தலைவர் டத்தோ இடாம் நவாவி மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத் தலைவர் டாக்டர் அனி அகமட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வை மந்திரி புசார் பார்வையிட்டார்.

இதற்கிடையில், உள்ளூர் அதிகார சபை (பிபிடி) உடனான தொடக்க ஒத்துழைப்பு உலு கில்லாங்கை ஒரு நிலையான சூழலுடன் ஒருங்கிணைந்த டிஜிட்டல் மாவட்டமாக மாற்றும் என்று கூறினார்.

தொழில் முனைவோர், தொழில்நுட்ப சப்ளையர்கள் மற்றும் சாதன உற்பத்தியாளர்கள் போன்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் 'சென்ட் பாக்ஸை' செல்காம் டிஜி வழிநடத்தும்.

"உள்ளூர் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப பகிர்வுகளுடன் இந்த கூட்டு முயற்சியை பயன்படுத்தி மற்ற கூட்டாளர்களுக்கு நன்மைகளைத் தரும் முன்மாதிரியாக இருக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.