SELANGOR

சுங்கை புவா, சுங்கை செமினியில் அசாதாரண வாடை  உணரப்பட்டதால், சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது - லுவாஸ்

6 பிப்ரவரி 2024, 6:20 AM
சுங்கை புவா, சுங்கை செமினியில் அசாதாரண வாடை  உணரப்பட்டதால், சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது - லுவாஸ்

ஷா ஆலம், பிப் 6: நேற்று இரவு சுங்கை புவா மற்றும் சுங்கை செமினியில் அசாதாரண வாடை உணரப்பட்டதால்  சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) ஒரு விரிவான சோதனை நடவடிக்கையை நடத்தியது.

நேற்றிரவு 8.30 மணியளவில் அசாதாரண துர்நாற்றம்  உணரப்பட்டதால் நீர் மாசுபாடு அவசர கையேட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"துர்நாற்ற கண்காணிப்பு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்டது. மற்றும் சுங்கை செமினியில் சமீபத்திய வாசிப்பில், வாடை  ஒரு டோன் அளவு பதிவு செய்யப்பட்டது.

"லுவாஸ் குழு தேடுதல் மற்றும் காரணத்தைக் கண்டறிய  தூண்டப்பட்டது," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தொடர்புடைய பகுதிகளில் மதிப்பாய்வு செய்வதற்கு நெகிரி செம்பிலானில் உள்ள தரப்புடன் லுவாஸ் தொடர்பு கொண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.