SELANGOR

குறைந்த வருமானம் கொண்ட கிராம வீட்டு உரிமையாளர்களுக்கு மதிப்பீட்டு வரி விலக்கு

2 பிப்ரவரி 2024, 12:15 PM
குறைந்த வருமானம் கொண்ட கிராம வீட்டு உரிமையாளர்களுக்கு மதிப்பீட்டு வரி விலக்கு

ஷா ஆலம், பிப் 2: குறைந்த வருமானம் கொண்ட கிராம வீட்டு உரிமையாளர்கள் மாநில அரசின் இந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு வரி விலக்கை தொடர்ந்து பெறுவார்கள்.

 தகுதியுடைய உரிமையாளர்கள் மார்ச் 1 முதல் மே 31 வரை  அதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஒவ்வொரு விண்ணப்பமும் செப்டம்பர் 1  2024 முதல் மதிப்பாய்வு செய்யப்படும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  இங் சுய் லீம் கூறினார்.

"கிராம வீட்டு உரிமையாளர்களுக்குத் தொடர்ந்து உதவி வழங்குவதுடன், அங்குள்ள வசதிகளை மேம்படுத்த இந்த ஆண்டு சில புதிய அணுகுமுறைகளையும் பின்பற்ற மாநில அரசு உறுதி பூண்டுள்ளது.

"சிலாங்கூரில் உள்ள கிராமங்களின் மதிப்பைப் பாதுகாக்கும் முயற்சியாகக் கிராமத்தில் உள்ள வசதிகள் தரம் மேம்படுத்தப்படும்" என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தகுதிகள் பின்வருமாறு:

• சிலாங்கூரில் வசிக்கும் மலேசிய குடிமக்கள்

• சிலாங்கூரில் உள்ள கிராம வசிப்பிடத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்

• 2,000 சதுர அடி மற்றும் அதற்குக் கீழே உள்ள கிராம வீடு

• வீட்டு மாத வருமானம் RM5,000 மற்றும் அதற்கும் குறைவாக இருத்தல்

• விண்ணப்பதாரர்கள் ஒரு வீட்டிற்கு மட்டுமே தகுதியுடையவர்கள்

இணையம் மற்றும் சுயமாகச் செய்யப்படும் விண்ணப்ப செயல்முறை விரைவுபடுத்துவது, முழுமையாகவும் சமூக சேவை மையம் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 100,000 கிராம வீட்டு உரிமையாளர்கள் RM11.551 மில்லியன் செலவில் மதிப்பீட்டு வரி விலக்கு மூலம் பயனடைந்த தாகச் சுய் லிம் கூறினார்.

"இந்த திட்டத்தில் மொத்தம் 745,790 யூனிட்டுகளுக்கு RM91.498 மில்லியன் ஒதுக்கீட்டில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.