SELANGOR

கிள்ளானுக்கு மாநகர் அந்தஸ்து- சமூக உறவை வலுப்படுத்த ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்து

2 பிப்ரவரி 2024, 9:13 AM
கிள்ளானுக்கு மாநகர் அந்தஸ்து- சமூக உறவை வலுப்படுத்த ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்து

கிள்ளான், பிப் 2- கிள்ளான் நகராண்மைக் கழகம் மாநகர் அந்தஸ்தை

அடையவுள்ள நிலையில் ஊராட்சிக் கொள்கைகளைக்

செம்மைப்படுத்துவதிலும் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை

வளர்ப்பதிலும் புதிதாக நியமிக்கப்பட்ட நகராண்மைக் கழக உறுப்பினர்கள்

கவனம் செலுத்த வேண்டும் என்று கிள்ளான் டத்தோ பண்டார் டத்தின் படுகா நோராய்னி ரோஸ்லான் வலியுறுத்தியுள்ளார்.

புதிதாக நியமனம் பெற்ற கவுன்சிலர்கள் முன்னிலையில் உரையாற்றிய

அவர், கிள்ளான் நகரின் வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களில் அவர்களின்

பங்கேற்பையும் மக்களுக்கு ஆக்ககரமான முறையில் சேவையாற்ற

வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டாரங்களில் உள்ள மக்களுக்குச்

சேவையாற்றுவது தவிர்த்து புதிய குழுக்களிலும் நகராண்மைக் கழக

உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். கொள்கைள் ஆக்ககரமான

முறையில் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அவர்கள் ஒன்றிணைந்து

பணியாற்றுவார்கள் எனத் தாம் நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.

எதிர்வரும் பிப்ரவரி 5ஆம் தேதி கிள்ளான் அரச மாநகராகப்

பிரகடனப்படுத்தப்படுவதற்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே

எஞ்சியுள்ளன. முதிர்ச்சியடைந்த அமைப்பு என்ற முறையில் மக்கள்

சேவை மற்றும் சிறந்த நிர்வாகத்தை மேம்படுத்தும் தேவை நகராண்மைக்

கழகத்திற்கு உள்ளது. இந்த தேவைகளைச் நிறைவேற்றுவதற்குப் புதிதாக

நியமிக்கப்பட்ட கவுன்சிலர்கள் பல நிரந்தர குழுக்களில்

நியமிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இன்று பதவி பிரமாண நிகழ்வில் 15 உறுப்பினர்கள் கவுன்சிலர்களாகப் பதவி

உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அவர்கள் கெஅடிலான் (நால்வர்),

ஜசெக ( எட்டு பேர்), அமானா (இருவர்) ஆகிய கட்சிகளைச்

சேர்ந்தவர்களாவர்.

பதவியேற்புச் சடங்கிற்குப் பின்னர் நகராண்மைக் கழகத்தின் முழு

அளவிலான கூட்டத்திற்கு நோராய்னி தலைமை தாங்கினார். இந்த

கூட்டத்தில் கவுன்சிலர்களோடு நகராண்மைக் கழகத்தின் துறைத்

தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.