SELANGOR

சிப்பாங் நகராண்மைக் கழக நடவடிக்கையில் 183 எலிகள் அழிப்பு

31 ஜனவரி 2024, 8:58 AM
சிப்பாங் நகராண்மைக் கழக நடவடிக்கையில் 183 எலிகள் அழிப்பு

ஷா ஆலம், ஜன 31-  சிப்பாங் நகராண்மைக் கழகம் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட  எலி ஒழிப்பு நடவடிக்கையின் மூலம் மொத்தம் 183 எலிகள் அழிக்கப்பட்டன.

தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைப்பது மற்றும்  பொது சுகாதாரத்திற்கு ஏற்படும்  தாக்கத்தை தவிர்ப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் சுற்றுச்சூழல் சுகாதாரத்  துறை இந்நடவடிக்கையை   மேற்கொண்டதாக நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

இந்த ஒரு நாள் நடவடிக்கையில்  எலி தொல்லை அதிகம் உள்ள பகுதிகளில் பொறிகளை  வைப்பதன் எலிகளைப் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அது  தனது முகநூல் பதிவில் கூறியது.

சிப்பாங் சுத்தமான மற்றும் நோய்ப் பரப்பும்  பூச்சிகளின் அச்சுறுத்தலில் இருந்து விடுபடுவதை உறுதி செய்ய  இதுபோன்ற நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என்று  நகராண்மைக் கழகம் விளக்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.