ஷா ஆலம், ஜன 24: உள்ளூர் சமூகத்தைச் சென்றடைய ஆண்டு முழுவதும் முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என செந்தோசா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் தொண்டு யாத்திரைகள், முதியோர் மற்றும் குழந்தைகள் மற்றும் நலன்புரி இல்லங்களுக்கு பயனாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய நிகழ்வான திறந்த இல்ல உபசரிப்பு போன்றவைகளும் தொடரும் என்று டாக்டர் ஜி குணராஜ் கூறினார்.
"இந்த திட்டத்தின் மூலம், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் கண்டறிய முடியும். இதன் மூலம், அவர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதோடு கூடுதலாக உதவ முடியும்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
அடுத்த மாதம் கொண்டாடப்படும் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு RM200 மதிப்புள்ள 450 வவுச்சர்களை ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு டாக்டர் ஜி குணராஜ் விநியோகிப்பார்.
"இந்த உதவி அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் என்று நம்புகிறோம். இங்கு எவரும் ஓரங்கட்டப் படுவதை நாங்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறினார். மேலும், அவர் சீன சமூகத்தின் தலைவருடன் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 23,900 பெறுநர்களுக்கு ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்க மொத்தம் RM16.48 மில்லியன் செலவிடப்பட்டது.
இது மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான நீண்டகால திட்டமாகக் குறைந்த வருமானம் பெறும் பிரிவினரை இலக்காகக் கொண்டு மாநில அரசு அறிமுகப்படுத்திய ஒரு முயற்சி ஆகும்.




