ஷா ஆலம், ஜன.24: பண்டமாரான் தொகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த (பி40) மொத்தம் 200 பள்ளி மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படும்.
அடுத்த மாத இறுதியில் இந்த உதவி வழங்கப்படும். மேலும், இந்த உதவி கற்றலின் போது சம்பந்தப்பட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் எனவும் நம்புவதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
“கண் பரிசோதனை உட்பட உண்மையிலேயே உதவி தேவைப் படுவோரின் பெயர்களைப் பள்ளியிடம் கேட்போம்.
"இந்த உதவியின் மூலம் மாணவர்களை ஊக்குவிப்பதோடு, வகுப்பில் கற்பித்தல் மற்றும் கற்றலின் போது அவர்கள் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என லியோங் தக் சீ சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
கல்வி நிறுவனங்கள் சிறந்த தலைமுறையை உருவாக்குவதற்கான தொடக்கமாக இருப்பதால் பள்ளிகளுக்கு உதவி வழங்குவதே தனது முன்னுரிமை என்றும் அவர் கூறினார்.
"கடந்த ஆண்டு இந்த தொகுதியில் RM300,000 க்கு மேல் 40 பள்ளிகளுக்கு வழங்கினோம். இந்த ஆண்டும் பள்ளிகளின் தேவைகளைக் கண்டறிய நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்," என்று அவர் கூறினார்.
கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக தனது தரப்பு 10 சக்கர நாற்காலி களையும் வழங்கியதாகக் கூறினார்.




