SELANGOR

சிலாங்கூரைச் சேர்ந்த  மாணவர்களுக்கு இலவசப் பவுண்டேஷன் கல்வி வாய்ப்பு  -  யுனிசெல் வழங்குகிறது

24 ஜனவரி 2024, 3:07 AM
சிலாங்கூரைச் சேர்ந்த  மாணவர்களுக்கு இலவசப் பவுண்டேஷன் கல்வி வாய்ப்பு  -  யுனிசெல் வழங்குகிறது

ஷா ஆலம், ஜன 24 - சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கான புதிய மாணவர் சேர்க்கையின்போது பவுண்டேஷன்  எனப்படும் அடிப்படைப் பயிற்சித் திட்டங்களுக்கும் இலவசக் கல்விக் கட்டணத்தை வழங்குகிறது.

சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் சலுகை  மாநிலக் குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று யுனிசெல் தெரிவித்துள்ளது.

யுனிசெல்லில்  உள்ள பவுண்டேஷன் திட்டங்களின் நன்மைகள்  என்னவென்றால் 12,000 வெள்ளி மதிப்புள்ள மதிப்புள்ள இலவச கல்விக் கட்டணம் மற்றும் ஒரு வருடம் அல்லது  மூன்று  தவணைகள் (செமஸ்டர்கள்) பாதுகாப்பான படிப்பு ஆகியவை ஆகும்.

மாணவர்கள் 200 வெள்ளிக் கட்டணத்தில்  பாதுகாப்பான மற்றும் வசதியான பல்கலைக்கழக  தங்குமிட வசதியை  அனுபவிப்பார்கள்.  அத்துடன் மலேசிய தகுதி நிறுவனத்தால் (எம் கியூ.ஏ.) அங்கீகாரம் பெற்ற படிப்புத் திட்டங்களையும் பெறுவார்கள் என்று யுனிசெல் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் www.unisel.edu.my/admission/programmes-offered/ என்ற இணையதளத்தில் உள்ள படிப்புகளை சரிபார்த்து  etawaran.unisel.edu.my மூலம் இயங்கலை வழி விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவலுக்கு 03-3280 5062 (Unisel Bestari Jaya campus) மற்றும் 03-5522 3400 (Unisel Shah Alam campus) அல்லது www.unisel.edu.my என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

யுனிசெல் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி   முன்னதாகக் கூறியிருந்தார்.

கடந்த  2022 ஆம் ஆண்டு யுனிசெல் பட்டதாரிகளின்  வேலைவாய்ப்பு  95.7 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது தேசிய சராசரி அளவான 90 சதவீதத்தை விட அதிகமாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.