SELANGOR

தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஸ்மார்ட் சிலாங்கூர் இலவசப் பேருந்து சேவை

24 ஜனவரி 2024, 2:02 AM
தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஸ்மார்ட் சிலாங்கூர் இலவசப் பேருந்து சேவை

ஷா ஆலம், ஜன 24: நாளை தொடங்கி இரண்டு நாள் தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பொது மக்களின் வசதிக்காக ஸ்மார்ட் சிலாங்கூர் இலவசப் பேருந்துக்கான சிறப்பு வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்து அராங்கிலிருந்தும் மற்றும் குண்டாங்கிலிருந்தும் வர்தா லாமா, தாமான் ஶ்ரீ செலாயாங்கிற்குச் செல்வதற்காக வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பேருந்து பயணத்தை அறிந்து கொள்ள https://myrapidbus.prasarana.com.my/kiosk என்ற இணைப்பைப் பார்வையிடலாம்.

2015 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து, ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து 60 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைப் பதிவு செய்துள்ளது அதாவது RM45 மில்லியன் வருடாந்திர ஒதுக்கீட்டில் 166 பேருந்துகள் 50 வழித்தடங்களில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டில் அதிகபட்ச பயன்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சேவையை அரசு நிறுவனங்கள், பள்ளிகள், அரசு மருத்துவ மையங்கள் மற்றும் வணிக மையங்களுக்குச் செல்வதற்காக 15.6 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.