SELANGOR

மூன்று இந்தியர்கள் உள்பட 23 பேர் சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக நியமனம்

23 ஜனவரி 2024, 7:56 AM
மூன்று இந்தியர்கள் உள்பட 23 பேர் சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக நியமனம்

ஷா ஆலம், ஜன 23 - சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் 2024/2025ஆம் ஆண்டு தவணைக்கு 23 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தவணைக்கான உறுப்பினர்களின் பதவியேற்புச் சடங்கு கடந்த சனிக்கிழமை  நகராண்மைக் கழகத் தலைமையகத்தில் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நியமனத்தில் விஜயராணி த/பெ ஆறுமுகம், சிவக்குமார் த/பெ பெரியசாமி மற்றும் சுகுமாறன் த/பெ கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் விஜயராணி மற்றும் சிவக்குமார் ஆகியோர் ஜசெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேளையில் சுகுமாறன் பி.கே.ஆர். கட்சியைப் பிரதிநிதிக்கிறார்.

இம்மூவரும் கடந்த தவணையின் போது நகராண்மைக் கழக உறுப்பினர்களாகப் பதவி வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.