SELANGOR

குழந்தை பராமரிப்பு பற்றிய அறிவை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு - இம்பாக் சிலாங்கூர்

22 ஜனவரி 2024, 8:56 AM
குழந்தை பராமரிப்பு பற்றிய அறிவை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு - இம்பாக் சிலாங்கூர்

ஷா ஆலம், ஜன 22: வீட்டிலேயே குழந்தை  பராமரிப்பாளர்களுக்கு அதைப் பற்றிய அறிவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு சிலாங்கூர் இல் திசம் குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி திட்டம் (இம்பாக் சிலாங்கூர்) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த  பட்டறை பங்கேற்பாளர்களில் ஒருவரான, 39 வயதான மஸ்தினி முகமட் சைன் குழந்தைகளைக் கவனிக்கும் பணிகள் பற்றிய நிறைய புதிய விஷயங்களை  இப் பட்டறையின் மூலம் கற்றதாக கூறினார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை காப்பகத்தை தொடங்கி மூன்று குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் அவர், குழந்தைகளின் அறிவை தூண்டுவதற்கான ஆக்கப்பூர்வமான புரிதலையும் வெளிப்படுத்துகிறார்.

"இந்தப் பட்டறையின் மூலம், நாங்கள் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது மட்டுமல்லாமல், அவர்களின் நேரத்தை நன்மை பயக்கும் செயல்களால் நிரப்புகிறோம். மேலும், குழந்தைகளை ஒழுக்கமானவர்களாக ஆக்குகிறோம்," என்று அவர் சிலாங்கூர்கினியைச் சந்தித்தபோது கூறினார்.

மற்றொரு பங்கேற்பாளர் ஏஞ்சல் யாப் யோக் சென் (43), எதிர்காலத்தில் குழந்தைப் பராமரிப்பாளராக ஆக விரும்புவதால், இத்திட்டத்தில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டினார்.

"மேலும், இதில் சுவாரஸ்யமான முறையில் ஆரோக்கியமான உணவு பயிற்சி மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி விளையாட்டு பொருட்களை உருவாக்குதல் ஆகிய நடவடிக்கைகளும் இடம்பெற்றன" என்று அவர் கூறினார்.

நேற்று தொடங்கி, குழந்தை பராமரிப்பு  குறித்த அறிவை மேம்படுத்துவதற்காக இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்பாக் சிலாங்கூர் நிகழ்ச்சியில் மொத்தம் 50 குழந்தைப் பராமரிப்பாளர்கள் பங்கேற்றனர்.

மூன்று குழந்தைகளைப் பராமரிக்கும் பராமரிப்பாளர்களுக்கு யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) இலவசப் பயிற்சி அளிக்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.