SELANGOR

காஜாங் நகராண்மைக் கழகத்திற்கு 23 உறுப்பினர்கள் நியமனம்-  5 இந்தியர்களுக்கு வாய்ப்பு

19 ஜனவரி 2024, 8:06 AM
காஜாங் நகராண்மைக் கழகத்திற்கு 23 உறுப்பினர்கள் நியமனம்-  5 இந்தியர்களுக்கு வாய்ப்பு

காஜாங், ஜன 19 - காஜாங் நகராண்மைக் கழகத்தின்  2024/2025 தவணைக்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் இன்று நடைபெற்றது.

 இங்குள்ள எம்.பி.கே.ஜே. தலைமையகத்தில் நடைபெற்ற இந்த  பதவியேற்பு சடங்கில்   5 இந்தியர்கள் உள்பட 23 பேர் இன்று  பதவியேற்றனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து 23 உறுப்பினர்களும் காஜாங் நகராண்மைக் கழக தலைவர்  நஸ்லி முகமட் தாயிப் முன்னலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இன்று பதவியேற்றவர்களில்  சந்திரன் ராமசாமி (பி.கே.ஆர் உலு லங்காட்), ராமசந்திரன் அர்ஜூனன், பி.கே.ஆர். பாங்கி தொகுதி தலைவர் பாலமுரளி கோவிந்தராஜு, ஜ.செ.க. பிரதிநிதியான தியாகராஜா ராஜகோபால், சங்கீதா சந்திரமோகன் ஆகியோர் அடங்குவர்.

இவர்கள்  கடந்த தவணையின் போதும் நகராண்மைக் கழக உறுப்பினர்களாகப் பதவி வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு சடங்கிற்குப் பிறகு  செய்தியாளர் சந்திப்பில்  பேசிய துவான் நஸ்லி,  கடந்த தவணையில் இருந்து பணியாற்றி வரும் நகராண்மைக் கழக உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டும் வகையில் உள்ளது.

பழைய நகராண்மைக் கழக உறுப்பினர்களின் அனுபவங்களுடன் புதிய நகராண்மைக் கழக உறுப்பினர்கள் இணையும் போது இவ்வாண்டு மற்றும் அடுத்தாண்டில் எம்.பி.கே.ஜே. மிகவும் சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன் துவான் நஸ்லி தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.