SELANGOR

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தில் மூன்று இந்தியப் பிரதிநிதிகளுக்கு இடம்

19 ஜனவரி 2024, 3:07 AM

அம்பாங் ஜெயா, ஜன 19 - அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் புதிய

உறுப்பினர்களாக 23 பேர் நேற்று பதவி உறுதி மொழி எடுத்துக்

கொண்டனர். 2024-2025ஆம் ஆண்டு தவணைக்கு நியமிக்கப்பட்ட புதிய

நகராண்மைக் கழக உறுப்பினர்களில் மூன்று இந்தியர்களும் அடங்குவர்.

நடேசன் த/பெ வரதன், விக்னேஸ்வரன் த/பெ ஜெயராம், ஆர்.மோகன்ராஜ்

த/பெ ரெங்கநாதன் ஆகியோரை அந்த மூன்று உறுப்பினர்களாவர்.

இவர்கள் அனைவரும் இங்குள்ள அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்

தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அனி அகமது முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த புதிய தவணைக்கு நியமிக்கப்பட்ட நகராண்மைக் கழக

உறுப்பினர்களில் எழுவர் புதுமுகங்கள் என்பதோடு ஆறு பேர் அல்லது 25

விழுக்காட்டினர் பெண்களாவர் என்று டாக்டர் அனி அகமது கூறினார்.

எனது அலுவலகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். நீங்கள்

எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகி கொள்கை, மேலாண்மை,

மக்கள் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசலாம் என்று அவர்

சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.