SELANGOR

இவ்வார இறுதியில் மேலும் எட்டு இடங்களில் மலிவு விற்பனை

19 ஜனவரி 2024, 1:33 AM
இவ்வார இறுதியில் மேலும் எட்டு இடங்களில் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜன 19: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப்

பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான்

ரஹ்மா திட்டம் இவ்வார இறுதியில் மேலும் எட்டு இடங்களில் காலை 10

மணிக்குத் தொடரும்.

சனிக்கிழமை அன்று தாபாக் ருவாங்கான் லப்பாங் ஜாலான்  BK4/1 (கின்றாரா), லாமன் நியாகா அம்பாங் வாட்டர்வெரன்ட் (லெம்பா ஜெயா), தாமான் ஶ்ரீ மூடா (கோத்தா கெமுனிங்) மற்றும் மஸ்ஜிட் கம்போங் பாசிர் பாரு (செமினி) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை  நடைபெறும்.

மேலும், ஞாயிறு அன்று மலிவு விற்பனை 99 ஸ்பிட்மார்ட் 1414 ஜாலான் தெப்பி சுங்கை (பண்டார் பாரு கிள்ளான்), அம்பாங் மேவா பொது மண்டபம் ( லெம்பா ஜெயா), மஸ்ஜிட் உபுடியா, செக்‌ஷன் 9 (பத்து 3) மற்றும் சுராவ் அர்-ரெளடா, செளஜானா இம்பியான் (காஜாங்) ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000

இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது.   ஐந்து

மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச்

சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்

மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை

ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00

வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.