ஷா ஆலம், ஜன 18: இல்திசம் அனாக் சிலாங்கூர் (அனாஸ்) திட்டம் 2022 இல் அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து மொத்தம் 25,266 விண்ணப்பங்கள் கிடைத்ததாக யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) தெரிவித்தது.
மொத்தம் 19,762 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் 4,508 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்றுகொள்ள படவில்லை என அதன் உதவி நிறுவன தகவல் தொடர்பு மேலாளர் கூறினார்.
மீதமுள்ள 10,238 விண்ணப்ப ஒதுக்கீடுகள் இன்னும் காலியாக உள்ளன மற்றும் 2022 மற்றும் 2023 இல் பிறந்த குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்குத் திறந்திருக்கும் என ஷரிசான் முகமட் ஷாரிவ் கூறினார்.
“சிலாங்கூரில் பிறந்த 30,000 குழந்தைகளுக்கான ஒதுக்கீடுகளை மாநில அரசு வழங்குவதால், இதுவரை எங்களிடம் ஒதுகீட்டில் காலியிடங்கள் உள்ளன.
"விண்ணப்பத்தை அனுப்ப தகுதியான பெற்றோரை நான் அழைக்கிறேன், அதன் பிறகு நாங்கள் தகுந்ததை பரிசீலனைகள் செய்வோம்," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.
அனாஸ் திட்டம், இல்திசம் அனாக் சிலாங்கூர் கீழ் 2022 யில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் பெறுநருக்கு ஐந்து வயது வரை வருடத்திற்கு RM100 சேமிப்புப் பலன்களை வழங்குகிறது.
மேலும், இத்திட்டம் 30,000 குழந்தைகளுக்கு நன்கொடையின் மதிப்பை நேரடியாக முதன்மை தேசிய கல்வி சேமிப்புத் திட்டம் (SSPN) கணக்கில் உள்ளிடுவதை நோக்கமாகக் கொண்டது.
ஆகஸ்ட் 1 2022 முதல் anas.yawas.com.my என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் மற்றும் விண்ணப்பங்களுக்கான இலக்கை அடைந்தவுடன் மூடப்பட்டுவிடும்.




