SELANGOR

சிகிஞ்சானின் மேம்பட்ட தர மற்றும் உற்பத்தி முறை மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்

18 ஜனவரி 2024, 9:40 AM
சிகிஞ்சானின் மேம்பட்ட தர மற்றும் உற்பத்தி முறை மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்

ஷா ஆலம், ஜன 18 : சபாக் பெர்ணம், சிகிஞ்சானில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடி முறை  மேம்பட்ட தர அரிசியை உற்பத்தி  செய்வதால். அந்த முறை மாநிலத்தின் மற்ற நெல் விவசாய பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதன்  வழி மாநிலத்தில் நெல்  உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

இந்த திட்டம் இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தாவரங்களைக் கையாளுதல் மற்றும் பராமரிப்பது போன்ற அம்சங்களையும் கருத்தில் கொள்ளும் என டத்தோ மந்திரி புசார் கூறினார்.

"சிகிஞ்சானில் அரிசி உற்பத்தி மிகவும் அதிகமாக உள்ளது மற்றும் தஞ்சோங் காராங், சுங்கை பஞ்சாங் மற்றும் சபாக் பெர்ணம் ஆகியவற்றின் உற்பத்தியில் இருந்து வேறுபட்டது.

எனவே நாங்கள் அதை எல்லா விவசாய பகுதிக்கும் விரிவுபடுத்த விரும்புவது டன், நெல்  விளைச்சல் பருவம் முழுவதும் கையாளப்படும்  நுட்பங்கள் மற்றும் பராமரிப்பு முறைகளையும் கட்டி எழுப்ப வேண்டும்.

இந்தத் திட்டத்தை உள்ளூர் அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லீம் மற்றும் நகர வளர்ச்சி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் ஆகியோர் நிர்வகிப்பார்கள் என்றார்.

முன்னதாக, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ஒவ்வொரு ஹெக்டரும் 12 டன் அரிசியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சிகிஞ்சானில், அரிசி விளைச்சல் நாட்டிலேயே மிக அதிகமாக உள்ளது என்று அமிருடின் தெரிவித்தார்.

விளைச்சலை அதிகரிக்க பயனுள்ள நீர்ப்பாசன அமைப்புகள் மட்டுமன்றி கூடுதலாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இன்டர்நெட் தாவர நுண்ணியல் (IoT) தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.

செவ்வாய் அன்று, நாட்டின் அரிசி தொழில் துறையை நேர்த்தியான நிலைக்கு  கொண்டுவர  இந்த ஆண்டு அரிசி அலை திட்டம் தொடங்கப்பட்டது என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு கூறினார்.

``Insentif Benih Padi Sah (IBPS)``க்கான புதிய கொள்கையை அறிமுகப் படுத்துவது உட்பட 12 திட்டங்களை அவரது தரப்பு கோடிட்டுக் காட்டியதாக முகமட் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.