SELANGOR

3,835 குழந்தை பராமரிப்பு திட்ட விண்ணப்பங்கள் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன

18 ஜனவரி 2024, 6:58 AM
3,835 குழந்தை பராமரிப்பு திட்ட விண்ணப்பங்கள் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், ஜன 18: கடந்த வாரம் வரை, பணிபுரியும் பெண்களுக்கான மொத்தம் 3,835 குழந்தை பராமரிப்பு திட்ட விண்ணப்பங்கள் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 1,165 மாமாகெர்ஜா விண்ணப்பங்கள் ஆவண சரி பார்ப்புக்காகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மகளிர் மேம்பாட்டு ஆட்சி குழு உறுப்பினர் அன்பால் சாரி தெரிவித்தார்.

"இந்த ஊக்கத்தொகை ஒதுக்கீடு 5,000 பெறுநர்களுக்கு வழங்குகிறோம். இதுவரை 3,835 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்கள் தற்போது ஆவணச் சரிபார்ப்பில் உள்ளன.

"தற்போது, மாநில அரசு மாமாகெர்ஜா உதவியைப் பெறுபவர்களின் ஒதுக்கீட்டை அதிகரிக்கத் திட்டமிடவில்லை," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

மாநிலம் முழுவதும் 5,000 பெண்கள் பயன்பெறும் வகையில் பணிபுரியும் பெண்களின் செலவைக் குறைக்க சிலாங்கூர் அரசாங்கம் குழந்தைப் பராமரிப்பு உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய மாமா கெர்ஜா திட்டம், கடந்த ஆகஸ்ட் மாதம் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய ஒற்றுமை அரசாங்கத்தின் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

முதல் சிலாங்கூர் திட்டத்திற்கு (RS-1) இணங்க பெண்கள் பணிபுரிவதை ஆதரிப்பதே அதன் செயலாக்கமாகும்.

RM5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்ட இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க குடும்ப வருமானம் RM8,000க்கு மிகாமல் 12 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளைக் கொண்ட பணிபுரியும் பெண்கள் தகுதியுடையவர்கள்.

பிற தகுதிகள் பின்வருமாறு:

-வேலை செய்யும் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்கள்

-சிலாங்கூர் குடிமக்கள் (சிலாங்கூரில் பிறந்தவர்கள் அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிலாங்கூரில் வசிப்பவர்கள்)

-சிலாங்கூர் வாக்காளர்

-RM8,000 மற்றும் அதற்கும் குறைவான குடும்ப வருமானம்

-உள்நாட்டு வருவாய் வாரியம் (IRB) கணக்கு அல்லது ஊழியர் சேமநிதி வாரிய (EPF) பங்களிப்பு உள்ள தனிநபர்கள்

-அசோ பிந்தார், பிங்காஸ் மற்றும் துனாஸ் ஆகியவற்றைப் பெறாதவர்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.