ஷா ஆலம், ஜன 18: எதிர்வரும் சனிக்கிழமையன்று, பந்திங் பொதுச் சந்தையில், பயன்படுத்திய பொருட்கள், உடைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை கொடுத்து பணமாக மாற்றிக் கொள்ள பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை `திரெஸ் டு கேஸ்` திட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாகக் கோலா லங்காட் நகராண்மை கழகம் (எம்பிகேஎல்) அறிவித்தது
“உங்களிடம் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் துணிகள் உள்ளதா? இந்த சனிக்கிழமை அன்று மேற்கண்ட திட்டத்தில் பங்கேற்கலாம்.
இந்த திட்டத்தில் பயன்படுத்திய பொருட்கள், உடைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை மட்டுமே பணமாக மாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
இந்நடவடிக்கை 2050 ஆம் ஆண்டில் பூஜ்ஜிய கார்பன் நிலையை அடைவதற்கான முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) நோக்கத்திற்கு ஏற்ப சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகும் என எம்பிகேஎல் தெரிவித்தது.
இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவலுக்கு, 012-3004847 ஐ அழைக்கவும்.




