SELANGOR

சிலாங்கூர் பென்யாயாங் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாடு

11 ஜனவரி 2024, 8:44 AM
சிலாங்கூர் பென்யாயாங் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் உள்கட்டமைப்பு மேம்பாடு

ஷா ஆலம், ஜன 11: சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் ஒதுக்கீட்டின் கீழ் மண்டபங்கள், சுராவ்கள் மற்றும் மசூதிகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பண்டான் இண்டா மாநில சட்டமன்ற உறுப்பினர் கவனம் செலுத்த உள்ளார்.

சமூகம் பயன் பெறுவதை உறுதி செய்வதற்காக பொதுக் கட்டமைப்புகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் தனது தரப்பு கவனம் செலுத்துவதாக இஷாம் ஹாஷிம் கூறினார்.

“சமூக மண்டபத்தின் மேற்கூரை மேம்படுத்துதல், கழிப்பறைகள் சீரமைத்தல், சுகாதார நிலையத்திற்கு சாலை மேம்படுத்தல், ஓனிங் அமைத்தல், கட்டுப்பாட்டுக் குடில்கள் கட்டுதல், கோயிலின் மேற்கூரையை மாற்றுதல் உள்ளிட்ட 11 திட்டங்கள் கடந்த ஆண்டு செயல் படுத்தப்பட்டன.

"இந்த ஆண்டு மண்டபங்கள், சுராவ்கள் மற்றும் மசூதிகளை மேம்படுத்துதல் போன்ற சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களில் கவனம் செலுத்தும்" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

கடந்த ஆண்டு, 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, பொது வசதிகளின் தரத்தை மேம்படுத்தவும், புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் 24 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் அறிவித்தார்.

15 ஆண்டுகளில் குறைந்த மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி குடியிருப்புகளுக்குச் சாயம் பூசுவும் அவற்றை மேம்படுத்தவும் RM10 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

56 மாநில சட்டமன்றங்களுக்கும் RM250,000 (மொத்தம் RM14 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.