ஷா ஆலம், ஜன 11: யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா சிலாங்கூர்) அதன் கீழ் இயக்கப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் RM60 மில்லியன் செலவிடப்படும் என எதிர்பார்க்கிறது.
நிதிக் கடன் தேவைப்படும் மேலும் பல தொழில் முனைவோருக்கு உதவ ஹிஜ்ரா சிலாங்கூர் தற்போதுள்ள திட்டத்தை தொடரும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மரியா ஹம்சா கூறினார்.
"உள்ளூர் தொழில் முனைவோருக்கு உதவ நாங்கள் எப்போதும் உறுதி பூண்டுள்ளோம். இதுவரை, புதிய திட்டம் எதுவும் அறிமுகப்படுத்தப் படவில்லை, ஆனால் எங்களிடம் உள்ளதை நாங்கள் தொடருவோம்," என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த ஆண்டு தொழில் முனைவோர் தங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்த ஹிஜ்ரா சிலாங்கூர் உதவுவதை வலியுறுத்தினார், குறிப்பாக `` e-dagang Shopee`` தளம் மூலம் ஆகும் என்றார்.
நிறுவனம் ஏற்கனவே கடந்த செப்டம்பரில் ஷோபியில் ஹிஜ்ரா அதிகாரப்பூர்வ அங்காடியைத் தொடங்கியதாகவும், வர்த்தகர்கள் மற்றும் வாங்குபவர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றதாகவும் அவர் விளக்கினார்.
"இதுவரை, எங்களிடம் 19 தயாரிப்புகள் உள்ளன, மேலும் எதிர்காலத்தில் தயாரிப்புகளைச் சேர்ப்போம்," என்று அவர் கூறினார்.
ஹிஜ்ரத் தொழில்முனைவோர் தயாரிப்புகளைப் பெற ஆர்வமுள்ளவர்கள், https://shopee.com.my/yhsjana என்ற இணைப்பை நாடலாம். RM50 அல்லது அதற்கு மேல் பொருட்களை வாங்கினால் ஷிப்பிங் கட்டணம் விதிக்கப்படாது.




