SELANGOR

மலேசியா ஏவியேஷன் குரூப் ஊழியர்களுக்கு புதிய சீருடை

11 ஜனவரி 2024, 7:31 AM
மலேசியா ஏவியேஷன் குரூப் ஊழியர்களுக்கு புதிய சீருடை

ஷா ஆலம், ஜன 11: மலேசியா ஏவியேஷன் குரூப் (MAG) ஊழியர்களுக்கான புதிய சீருடைகளை நேற்று சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி அதிகாரப்பூர்வமாக  அறிமுகப்படுத்தி வைத்தார்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோர்ஹாஷிகின் வருகையை மலேசியா ஏவியேஷன் குரூப் தலைவர், தான் ஶ்ரீ வான் சுல்கிவ்லி வான் அரிபின் மற்றும் அதன் குழும நிர்வாக இயக்குநர், டத்தோ கேப்டன் இஷாம் இஸ்மாயில் ஆகியோர் எதிர்கொண்டு வரவேற்றனர்.

சீருடையை புதுப்பித்ததற்கும் மலேசியர்களின் பாரம்பரிய அடையாளத்தை பிரதிபலிக்கும் வடிவமைப்பைக் கொண்ட  ஏவியேஷன் ஆடைகளை வரவேற்று பாராட்டுவதாக தெங்கு பெர்மைசூரி தனது வாழ்த்துகளில் தெரிவித்தார் என சிலாங்கூர் ராயல் அலுவலகம் முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

"புதிய சீருடைகளை உள்நாட்டில் உள்ள குழு வடிவமைத்துள்ளது, மலேசியா ஏவியேஷன் குரூப் ஊழியர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதால், இந்த கூட்டு முயற்சியை தெங்கு பெர்மைசூரி பாராட்டினார்.

"சீருடை என்பது வெறும் ஆடை மட்டுமல்ல, அதை அணியும் தனிநபரின் தொழில்முறை, அர்ப்பணிப்பு மற்றும் பெருமை ஆகியவற்றைக் குறிக்கிறது" என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.