SELANGOR

பொது சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் தொடர்ந்து மேம்படுத்தப்படும் - இல்திசம் சிலாங்கூர் சிஹாட்

11 ஜனவரி 2024, 7:27 AM
பொது சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் தொடர்ந்து மேம்படுத்தப்படும் - இல்திசம் சிலாங்கூர் சிஹாட்

ஷா ஆலம், ஜன 11: இல்திசம் சிலாங்கூர் சிஹாட் (ஐஎஸ்எஸ்) மூலம் செயல்படுத்தப்படும் பொது சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் இந்த ஆண்டும் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்று பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளின் குழுவில் சிகிச்சை பெற ஒவ்வொரு பாலிசிதாரரும் ஆண்டுக்கு RM10,000 வரை பலன்களைப் பெறுவார்கள் என்பது மேம் பாடுகளில் அடங்கும் என்று ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

80 வயது மற்றும் அதற்கு குறைவான பாலிசிதாரர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அவசரகாலச் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கும் இரண்டு நடைமுறை பலன்களை அவர் விளக்கினார்.

"இரண்டாவதாக, சாதரணப் பிரச்சனை என்றால் செல்கேர் கிளினிக்கிலிருந்து மருத்துவரின் பரிந்துரையுடன் பலன்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறோம்.

"செல்கேர் டெலிமெடிசன் கிளினிக்கில் ``SELangkah`` விண்ணப்பம் மற்றும் அரசு அல்லது தனியார் கிளினிக் மருத்துவர் பரிந்துரைகள் மூலம் பதிவு செய்யப்படுகிறது," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இதற்கிடையில், மாநில நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவசச் சுகாதாரப் பரிசோதனை திட்டமான சிலாங்கூர் சாரிங் இந்த மாநில மக்களின் நலனுக்காக மேம்படுத்தப்படும் என்றும் ஜமாலியா கூறினார்.

சிலாங்கூர் பட்ஜெட் 2024 ISS திட்டத்தின் தொடர்ச்சிக்காக RM35 மில்லியனை ஒதுக்குகிறது. இது பாலிசி வைத்திருப்பவர்கள் தனியார் கிளினிக்குகளில் உடனடி சிகிச்சை பெற உதவுகிறது.

ஒவ்வொரு பாலிசிதாரரும் குடும்பப் பிரிவினருக்கு ஆண்டுக்கு RM500 அடிப்படை சிகிச்சை பெற தகுதியுடையவர்கள். அதே சமயம் தனிநபர்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள எந்தவொரு பேனல் கிளினிக்கிலும் வருடத்திற்கு RM250 சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.