ஷா ஆலம், ஜன 11: எஹ்சான் மார்ட்டின் நான்கு கிளைகளில் சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டு கழகத்தால் (பிகேபிஎஸ்) மலிவு விலையில் விற்கப்படும் சமையல் பொருட்களை வாங்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
ஏஹ்சான் ரஹ்மா விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டாலும், மக்கள் இன்னும் தேவையான பொருட்களைப் பெற முடியும் என அதன் சந்தைப்படுத்தல் மேலாளர் நோர் ராசிடா முகமட் ரய்யான் கூறினார்.
"எஹ்சான் மார்ட்டில் 300க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் 41 எஹ்சான் பிராண்டுகள் ஆகும். எஹ்சான் மார்ட்டின் விலைகள் நடமாடும் டிரக்குகளைப் போல இல்லை என்றாலும் வெளி சந்தைகளுடன் ஒப்பிடும்போது இன்னும் மலிவாகவே உள்ளது.
"உதாரணமாக, ஒரு கோழி கிலோவிற்கு RM8.10 மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி 900 கிராமுக்கு RM14க்கு விற்கப்படுகிறது," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
ஜனவரி 15 முதல் ஏஹ்சான் ரஹ்மா விற்பனை மீண்டும் தொடங்கும்.
வெள்ளிக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மலிவு விற்பனையை ஏற்பாடு செய்வதோடு, உள்ளூர்வாசிகளுக்கு அதன் வரம்பை விரிவுபடுத்தும் வகையில் செகி ஃப்ரெஷ் உடன் பிகேபிஎஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
எஹ்சான் மார்ட்டின் நான்கு கிளைகள்:
1. விஸ்மா பிகேபிஎஸ், செக்ஷன் 14
2. அவுட்லெட் ஏஹ்சான் பிகேபிஎஸ், செக்ஷன் 9
3. அவுட்லெட் எஹ்சான் பிகேபிஎஸ், மேரு
4. எஹ்சான் கியோஸ்க், சிலாங்கூர் ஃபுரூட் வெலி




