SELANGOR

ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை, சிகிஞ்சான் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது 

10 ஜனவரி 2024, 6:45 AM
ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை, சிகிஞ்சான் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது 

சபாக் பெர்ணம், ஜன.10: கடந்த ஓராண்டாக சிகிஞ்சான் சுற்றுவட்டார வியாபாரிகள் கடைப்பிடித்து வரும் ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை அப்பகுதிக்கு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.

டிஜிட்டல் மயமாக்கல் முறை விற்றல் மற்றும் வாங்குதல் நடவடிக்கையை எளிதாக்கியது, அதே நேரத்தில் சுற்றுபயணிகள் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கிறது என சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் கூறினார்.

"இந்த நடவடிக்கை குடியிருப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் இந்த முறையை விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்கள் அதிக பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. வங்கி அட்டை அல்லது கைபேசி இருந்தால் போதுமானது. சிகிஞ்சானில், இந்த முறை சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி, மாணவர்களும் பயன்படுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளியில் பயன்படுத்தக்கூடிய அட்டைகள் வழங்கப்படுகின்றன," என்றார்.

நேற்று கோலா சிலாங்கூர் முதல் சபாக் பெர்ணம் வரையிலான சுவாரஸ்யமான இடங்களைக் காண தாய்லாந்தில் இருந்து அஞ்சோங் உத்தாராவுக்குச் சென்ற பயண முகவர்கள் குழுவை வரவேற்றப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹாங் லியோங் பேங்க் Bhd (HLB), Payments Network Malaysia Sdn Bhd (PayNet) உடன் இணைந்து, விசிட் சிகிஞ்சான் 2023 திட்டத்தின் மூலம் மலேசியாவின் முதல் பணமில்லா கிராமமாகச் சிகிஞ்சானைத் தேர்ந்தெடுத்தது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.