SELANGOR

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களுக்கு RM12,000 பண உதவி - எம்பிஐ

10 ஜனவரி 2024, 1:59 AM
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களுக்கு RM12,000 பண உதவி - எம்பிஐ

உலு லங்காட், ஜன 10: காஜாங்கில் உள்ள தாமான் புக்கிட் மேவா மற்றும் கம்போங் சுங்கை செகாமட் ஆகிய இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களுக்குச் சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ RM12,000 பண உதவியை இன்று வழங்கியது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை ஏற்பட்ட இழப்பை எதிர்கொண்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரிம 2,000 உதவி வழங்கப்பட்டது என அதன் சமூகப் பொறுப்பு மற்றும் பெருநிறுவனத் தகவல் தொடர்புத் தலைவர் கூறினார்.

"எம்பிஐ மூலம் மாநில அரசு பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

"இந்த ஆண்டு முழுவதும் தீ, வெள்ளம், புயல் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ எம்பிஐ RM1 மில்லியன் ஒதுக்குகிறது" என்று அஹ்மத் அஸ்ரி சைனல் நோர் கூறினார்.

காஜாங் மாநில சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங்குடன் நன்கொடை வழங்கல் விழா நடத்தப்பட்டது.

இதற்கிடையில், நன்கொடை வழங்கிய எம்பிஐக்குத் டேவிட் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தீயால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும் என்று நம்புவதாக கூறினார்.

"எம்பிஐ உதவிக்குக் கூடுதலாக, காஜாங் மாநில சட்டமன்ற சேவை மையமும் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆரம்ப உதவியாக RM500 வழங்கியது. பாதிக்கப் பட்டவர்களில் முதியவர்கள் இருப்பதால் சமூக நலத்துறை (ஜேகேஎம்) உதவியையும் நாங்கள் கோரியுள்ளோம்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.