SELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனை எதிர்வரும் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கும்

9 ஜனவரி 2024, 3:08 AM
மாநில அரசின் மலிவு விற்பனை எதிர்வரும் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கும்

ஷா ஆலம், ஜன 9 - சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்

(பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை எதிர்வரும்

திங்கள்கிழமை தொடங்கி மீண்டும் நடத்தப்படும்.

அத்தியாவசியப் பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்யும்

இந்த ஏஹ்சான் ரஹ்மா திட்டம் இம்மாதம் 1 முதல் 14 வரை தற்காலிகமா

நிறுத்தி வைக்கப்பட்டப் பின்னர் வரும் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி

அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் நடைபெறும் என்று அக்கழகம் தனது

பேஸ்புக் பதிவில் கூறியது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு

பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00

வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் சமையல்

எண்ணெய் 5 கிலோ 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13 வெள்ளிக்கும்

விற்கப்படுகிறது.

இவ்வாண்டு மாநிலம் முழுவதும் 1,800 இடங்களில் இந்த மலிவு விற்பனை

நடத்தப்படும் என்று பி.கே.பி.எஸ். தலைமை நிர்வாகி முகமது பாஸிர்

அப்துல் லத்திப் இம்மாதம் 2ஆம் தேதி கூறியிருந்தார்.

பொது விடுமுறை, வெள்ளிக்கிழமை நீங்கலாக மற்ற தினங்களில் இந்த

மலிவு விற்பனை மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த

விற்பனையை விரிவுபடுத்துவதற்காகப் பி.கே.பி.எஸ். செகி ப்ரேஷ்

பேரங்காடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது.

மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்களை

பி.கே.பி.எஸ். பேஸ்புக் மற்றும் மலிவு விற்பனை தொடர்பான

பிரசுரங்களில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன்

மூலமாகவும் அல்லது என்ற http://linktr/myPKPS இணைப்பின் வாயிலாகவும்

தெரிந்து கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.