SELANGOR

ஸ்ரீ செத்தியா தொகுதியில் வியாழன்தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்வு

8 ஜனவரி 2024, 8:22 AM
ஸ்ரீ செத்தியா தொகுதியில் வியாழன்தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்வு

ஷா ஆலம், ஜன 8 - ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதி ஒவ்வொரு வாரம்

வியாழக்கிழமை மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறும்.

மக்களின் பிரச்சனைகள் மற்றும் கருத்துகளைக் கேட்டறியும் நோக்கிலான

இந்த நிகழ்வு இம்மாதம் 11ஆம் தேதி தொடங்கி எண். 31டி கிளானா மால்,

கிளானா ஜெயா எனும் முகவரியில் நடைபெறும் என்று தொகுதி

சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஃபாஹ்மி ஙா கூறினார்.

இந்த மையத்தில் ஒரே நேரத்தில் அதிகமானோர் கூடுவதைத் தவிர்க்கும்

நோக்கில் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது

பேஸ்புக் பதிவில் கூறினார். கோவிட்-19 பெருந் தொற்று பரவலைத்

தடுக்கும் விதமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே,

பொது மக்கள் முன்கூட்டியை தொகுதி சேவை மையத்தைத் தொடர்பு

கொண்டு தங்களின் வருகையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என

அவர் சொன்னார்.

பொது மக்கள் 018-2060359 என்ற வாட்ஸ்ஆப் எண்களின் தங்களின்

வருகையைப் பதிவு செய்து கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.