SELANGOR

தஞ்சோங் ஹரப்பான் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் 100 பேர் பங்கேற்பு

8 ஜனவரி 2024, 3:17 AM
தஞ்சோங் ஹரப்பான் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் 100 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், ஜன 8: அரசு சாரா அமைப்பு ``என்லைட்டன்மென்ட் `` என்ற  இயக்கத்தால் நேற்று நடத்தப்பட்ட தஞ்சோங் ஹரப்பான் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் திட்டமான சமுத்திரத்தின் மீது நமது அக்கறை  என்னும் ‘'வி கேர் ஃபார் தி ஓசியன்’' நிகழ்ச்சியில் மொத்தம் 100 நபர்கள் கலந்து கொண்டனர்.

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சி, KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) மற்றும் சுங்கை கிள்ளான் ஹெரிடேஜ் கிளப் ஆகியவற்றின் ஒத்துழைப்பை கொண்டுள்ளது என கிள்ளான் நகராண்மை கழகம் தெரிவித்தது.

"கடலின் நிலைத்தன்மை மற்றும் கடலோர பாதுகாப்பு திட்டங்கள் குறித்து உள்ளூர் சமூகத்தினரிடையே விழிப்புணர்வையும் அக்கறையையும் அதிகரிக்க இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சமூகத் துறை மற்றும் நகர திட்டமிடல் துறை, கிள்ளான் நகராண்மை கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சோங் ஹரப்பான் அல்லது 'கேப் ஆஃப் குட் ஹோப்' இரண்டு கிலோமீட்டர் (கிமீ) பரப்பளவு கொண்ட கடற்கரையை கொண்டுள்ளது மற்றும் கிள்ளான் கோல்ஃப் ரிசார்ட் துறைமுகத்தின் எல்லையாக உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.