SELANGOR

எஹ்சான் ரஹ்மா விற்பனை ஜனவரி 15ஆம் தேதி தொடங்கும்

8 ஜனவரி 2024, 12:30 AM
எஹ்சான் ரஹ்மா விற்பனை ஜனவரி 15ஆம் தேதி தொடங்கும்

ஷா ஆலம், ஜன 8: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகத்தால் (பிகேபிஎஸ்) மேற்கொள்ளப்படும் எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டம் (ஜேஇஆர்) ஜனவரி 15ஆம் தேதி தொடங்கும்.

“வாகனங்களைப் பராமரிக்கவும் பொருட்களின் கையிருப்பை முறைப்படுத்தவும் சிறிய இடைவெளி எடுக்கிறோம்,” என அந்நிறுவனம் முகநூலில் தெரிவித்துள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் சமையல் எண்ணெய் 5 கிலோ 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொது விடுமுறை, வெள்ளிக்கிழமை நீங்கலாக மற்ற தினங்களில் இந்த மலிவு விற்பனை மாநிலம் முழுவதும் நடத்தப் படுகிறது. இந்த விற்பனையை விரிவுபடுத்துவதற்காக பி.கே.பி.எஸ். செகி ப்ரேஷ் பேரங்காடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.