ECONOMY

சிலாங்கூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அத்துமீறி நுழைந்த மூவர் கைது

6 ஜனவரி 2024, 9:27 AM
சிலாங்கூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அத்துமீறி நுழைந்த மூவர் கைது

ஷா ஆலம், ஜன 6 - சிலாங்கூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் மூன்று பேரைத் தாங்கள் கைது செய்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் அவர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெறும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும்  ஷா ஆலம் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமது  இக்பால் இப்ராஹிம் பெர்னாமா தொடர்பு கொண்டபோது   கூறினார்.

நேற்று, இங்குள்ள செக்சன் 7இல் உள்ள சிலாங்கூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மூன்று நபர்கள் அத்துமீறி நுழைந்தது  சித்தரிக்கும்  29 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.