SELANGOR

ஸ்டாக்-அவுட் விற்பனை- சிலாங்கூர் எஃப்சி கிளப்

5 ஜனவரி 2024, 1:47 AM
ஸ்டாக்-அவுட் விற்பனை- சிலாங்கூர் எஃப்சி கிளப்

ஷா ஆலம், ஜன 5: சிலாங்கூர் எஃப்சி கிளப்பின் அதிகாரப்பூர்வத் தயாரிப்புகளுக்கான ஸ்டாக்-அவுட் விற்பனை ஜனவரி 3 தொடங்கி ஜனவரி 7 வரை நடைபெறும்.

70 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையைச் செக்‌ஷன் 5யில் உள்ள சிலாங்கூர் எஃப்சி பயிற்சி மையத்தில் மட்டுமே பெற முடியும் என முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

“ரெட் ஜையன்ட்ஸ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஜனவரி 3 முதல் 7 வரை ஸ்டாக்-அவுட் விற்பனை நடைபெறும்.

“இந்த தள்ளுபடி சிலாங்கூர் எஃப்சி பயிற்சி மையத்தில் உள்ள எங்கள் அதிகாரப்பூர்வக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அங்கே சந்திப்போம்,” என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பரில், சிலாங்கூர் எஃப்சி, சூப்பர் லீக் ஆட்டத்தில் கெடா டாருல் அமான் எஃப்சியைத் தோற்கடித்ததால் அடுத்த சீசனில் ஆசிய அரங்கிற்கு டிக்கெட் பதிவு செய்ய முடிந்தது.

இந்த வெற்றியால் ரெட் ஜையன்ட்ஸ் ஆசிய சாம்பியன்ஸ் லீக் 2 (ACL2) க்கு தகுதி பெற்றது. இதனால் 2016 முதல் ஏழு வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.