வறுமையை ஒழிக்கும் முயற்சியில் வணிக உதவிகள் முடிவல்ல; பொருளாதார முன்னேற்றத்திற்கான தொடக்கம் – பாப்பாராய்டு

29 அக்டோபர் 2026, 10:09 AM
வறுமையை ஒழிக்கும் முயற்சியில் வணிக உதவிகள் முடிவல்ல; பொருளாதார முன்னேற்றத்திற்கான தொடக்கம் – பாப்பாராய்டு

கோம்பாக், அக்.29 — வறுமையை ஒழிக்கும் முயற்சியில், வணிக உபகரணங்களுக்கான உதவிகளைப் பெறுவது முடிவல்ல; மாறாக, அதன் மூலம் வருமானத்தை அதிகரித்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான தொடக்கமாக அமைய வேண்டும் எனச் சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வலியுறுத்தியுள்ளார்.

மாநில அரசின் புளூபிரிண்ட் (Blueprint) மற்றும் இந்தியத் தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான ஐ-சிட் (i-SEED) திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பயனாளிகள் முறையாகப் பயன்படுத்தி, தங்களது தொழில்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன் தொழிலை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கோம்பாக்கிலுள்ள தாமான் ஸ்ரீ கோம்பாக், பெரிங்கின் மண்டபத்தில் இன்று நடைபெற்ற புளூபிரிண்ட் மற்றும் i-SEED உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது, புளூபிரிண்ட் திட்டத்தின் கீழ் 27 பயனாளிகளுக்கு மொத்தம் 2 இலட்சத்து 26 ஆயிரத்து 200 ரிங்கிட் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. அதேவேளை, i-SEED திட்டத்தின் கீழ் மேலும் 21 பயனாளிகளுக்கு 94 ஆயிரத்து 500 ரிங்கிட் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.

இதனிடையே, புளூபிரிண்ட் மற்றும் i-SEED ஆகிய இரு திட்டங்களும் சிலாங்கூர் மாநில அரசின் வறுமை ஒழிப்பு முன்னெடுப்புகளில் முக்கியமானவை என UPEN துறைசார் பிரிவின் உதவி இயக்குநர் ரஹாயு அலி தெரிவித்தார்.

இந்த இரு திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக மாநில அரசு இதுவரை ஒட்டுமொத்தமாக சுமார் 20 லட்சம் ரிங்கிட் நிதியைச் செலவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் பெறும் மக்கள் தங்களது பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்வதற்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், அடுத்த ஆண்டும் இதுபோன்ற உதவித் திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என ரஹாயு கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.