SELANGOR

உணவு கூடை திட்டத்தை நடத்த 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – எம்பிஐ

4 ஜனவரி 2024, 9:11 AM
உணவு கூடை திட்டத்தை நடத்த 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – எம்பிஐ

ஷா ஆலம், ஜன 4: இந்த ஆண்டு முழுவதும் உணவு கூடை  திட்டத்தை வெற்றிகரமாக  முன்னெடுக்க 1 மில்லியன் ரிங்கிட் எம்பிஐ ஒதுக்கியுள்ளது.

இந்த நன்கொடை மிகவும் பின்தங்கிய சமூகங்களுக்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அஹ்மத் அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.

"முன்பு, உணவு கூடை விநியோகம் செய்யப்பட்டது, ஆனால் சிறப்பு ஏற்பாடு இல்லை, இந்த ஆண்டு, நாங்கள் உணவு நன்கொடை திட்டத்தின் கீழ் சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளோம், இது தேவைகளுக்கு ஏற்ப விநியோகிக்கப்படும், குறிப்பாக பண்டிகை காலங்களில் ஆகும் என்றார்.

"இந்த சிறப்பு ஒதுக்கீடு திட்டத்தின் மூலம் பின்தங்கிய குழுக்களுக்கு உதவ முடியும், இதன் மூலம் அவர்களின் சுமையைக் குறைக்க முடியும்," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

வசதியற்ற சிலாங்கூர் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் நன்கொடையாக வழங்கும் திட்டத்திற்கு RM150,000 ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

"மாநிலத்தில் மட்டுமின்றி மலேசியா முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சிலாங்கூர் மாணவர்களுக்கும் இலவசச் சிம் கார்டுகள் வழங்கப்படுகின்றன," என்று அவர் விளக்கினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சமூகத் திட்டங்களுக்கு RM18 மில்லியனை எம்பிஐ ஒதுக்கியுள்ளது என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.